தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் ஐப்பசி மாத துலா உற்சவ திருவிழா தொடக்கம்!

மயிலாடுதுறை: ஐப்பசி மாத துலா உற்சவ திருவிழா தொடங்கியதையடுத்து, கரோனா கட்டுப்பாட்டால் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு இல்லாமல், அஸ்திரதேவர் காவிரிக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

துலா உற்சவ திருவிழா
துலா உற்சவ திருவிழா

By

Published : Oct 17, 2020, 5:28 PM IST

மயிலாடுதுறையில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றது. ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதால் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி துலாகட்டத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்றால் மக்கள் கூடும் திருவிழாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதால் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் காவிரிக்கரைக்கு செல்லாமல் அஸ்திரதேவர் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முதல் நாளான இன்று (அக்.17) மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களான அபயாம்பிகை சமேத மயூரநாதசுவாமி, விசாலாட்சி சமேத ஐயாரப்பர், காசிவிசுவநாதர், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆகிய ஆலயங்களிலிருந்து அஸ்திரதேவர் காவிரி கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

துலா உற்சவ திருவிழா

காவிரியின் இரண்டு பக்க கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் புனித நீராடினர். கரோனா பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டினால் சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் செல்லாமல் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது காவிரிக்கரையில் நடைபெற்றதால் கலையிழந்து காணப்பட்டது.

இதையும் படிங்க:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details