தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை: அரசாணை வெளியீடு - நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவித்தார்

சென்னை: தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்துள்ளது.

By

Published : Apr 7, 2020, 11:47 PM IST

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 24ஆம் தேதி சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கோரிக்கையை ஏற்றும், நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவித்தார்.

38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளதற்கான அரசாணை

அந்த அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறையில் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு வருவாய் நிர்வாக ஆணையர் காரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வார் என்று தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details