மயிலாடுதுறையில் கடந்த நான்கு தினங்களாக 40 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதனால் புறநகர் பகுதி மற்றும் தாழ்வான பகுதி தெருக்களில் அதிக அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
தேங்கிய வெள்ளத்தில் போட்டிங்... வைரலாகும் சிறுவர்களின் காணொலி! - mayiladuthurai flood
மயிலாடுதுறை: நீச்சல் குளத்தில் பயன்படுத்தும் காற்றடைக்கப்பட்ட படுக்கையில் மிதந்தபடி தேங்கிய வெள்ளத்தில் விளையாடும் சிறுவர்களின் காணொலி வைரலாகி வருகிறது.
அது மட்டுமின்றி, ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுவதால் வெள்ளநீர் வடிவத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த குறும்புக்கார சிறுவர்கள் சிலர் நீச்சல் குளங்களில் பயன்படுத்தும் காற்றடைக்கப்பட்ட படுக்கையை கொண்டு வெள்ளத்தில் குறும்பு செயலில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பின்னணியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடும் Sing in the rain, i am Sung in the rain என்ற பாடல் ஒலிக்கிறது. பார்க்க இந்த வீடியோ நகைச்சுவையாக இருந்தாலும் கூட மழை நீர் வடியாததைக் காட்டும் அவலமும் அதனோடே இலைமறை காயாகத் தெரிகிறது.