மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, சந்திரபாடி மீனவர் காலனியைச் சேர்ந்த இளைஞர் தீபக் (20). இவர் சக மீனவரான சாமி, சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து புதன்கிழமை (ஜூன்.16) அதிகாலை மூன்று மணியளவில் சந்திரபாடியிலிருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு கடல் மைல் (Nautical mile) இவர் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தீபக் காணாமல் போனததால் மற்ற மீனவர்கள் கடலில் தேடியுள்ளனர்.
கடலில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்
மீனவர் மாயமானது குறித்து தரங்கம்பாடி கடலோரக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கடலில் மீனவரைத் தேடிவந்தனர். தொடர்ந்து இன்று (ஜூன்.18) அதிகாலை சந்திரபாடி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.