மயிலாடுதுறை:சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச்சேர்ந்த மீனவர் வீரவேல். கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினரால் சுடப்பட்டு, பலத்த காயமடைந்து மதுரையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருடன் மீன் பிடிக்கச்சென்று காயமடைந்த வானகிரியைச்சேர்ந்த சக மீனவர்களான செல்வகுமார், சுரேஷ், செல்லதுரை, மோகன்ராஜ் உள்ளிட்ட மீனவர்கள்; சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.
அந்த மீனவர்களிடம் சம்பவம் குறித்தும், அவர்களது கருத்து மற்றும் கோரிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள் இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்; தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.