மயிலாடுதுறை: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று (ஆக.3) மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்க வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 'கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்'