மயிலாடுத்துறை :தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் , மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
3 நாள்கள் கனமழை
இந்நிலையில்,3 நாள் மழையில் மயிலாடுதுறை அருகே பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன் ஆகிய கிராமங்களில் மழை நீர் வடிய வழியின்றி ஆயிரத்திற்க்கும் பேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த மழையின் போது நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் நீரை வடியவைத்து அடியுரங்களை இட்டு காப்பாற்றி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையை தெரிவித்தனர்.