தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஏடிடி 46 ரக விதைநெல் மறுக்கப்படுகிறதா?

மயிலாடுதுறை: உழவன் செயலியில் ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு காட்டியும், வேளாண் அலுவலர்கள் இல்லை என மறுத்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Farming land
Farming land

By

Published : Sep 12, 2020, 8:57 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி முன்பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக தங்கள் வயல்களை உழுது தயார் செய்து வரும் விவசாயிகள், உழவன் செயலி மூலம் மயிலாடுதுறை சேமிப்புக் கிடங்கில் ஏடிடி 46 ரக விதைநெல் 4 ஆயிரத்து 190 கிலோ இருப்பு இருப்பதை அறிந்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியுள்ளனர்.

இந்த ரக நெல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் ரூ. 28க்கும், மானியம் இல்லாமல் ரூ. 37க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மானிய விலையிலான ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு இல்லை எனவும், மானியம் இல்லாத விதைநெல் மட்டுமே இருப்பு உள்ளதாகவும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரக தரமான விதைநெல் தனியாரிடம் 35 ரூபாய் மதிப்பிலேயே கிடைக்கிறது.

எனவே, ஏடிடி 46 ரக விதைநெல்லை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி சக்திவடிவேல் கூறுகையில், “உழவன் செயலியில் முதலில் நான்கு டன் விதைநெல் இருப்பு காட்டியபோது, நெல் இருப்பு இல்லை என அலுவலர்கள் மறுத்தனர், இரண்டு நாள்கள் கழித்து பார்க்கும்போது இருப்பு 600 கிலோ மட்டுமே காட்டியது.

நிலத்தில் நன்றாக விளையும் விதைநெல்லை கேட்கும்போது, வேளாண்மைத் துறை அலுவலர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள வேறு ஒரு விதைநெல்லை விவசாயிகளிடம் திணிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக வட்டார வேளாண் இயக்குநர் கே. சங்கரநாராயணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு இல்லை, இனி அடுத்த ஆண்டுதான் இந்த ரக விதைநெல் வரும். உழவன் செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருக்காது, தற்போது கோ 50 ரக நெல் சுமார் பத்து டன் மட்டுமே இருப்பில் உள்ளது” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details