மயிலாடுதுறை நகராட்சியில் 2007 ஆம் ஆண்டுமுதல் பாதாளச்சாக்கடை திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், தரமற்ற முறையில் பாதாளச்சாக்கடை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 3 வருடங்களாக பாதாளச்சாக்கடை குழாய் உடைப்பு காரணமாகச் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளருமான குத்தாலம் கல்யாணம், பாதாளச்சாக்கடை திட்டத்தை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தார். அப்போது, நீதிமன்றம் ஆய்வுக்குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அரசு அலுவலர்கள், தமிழ்நாடு அரசுக்கு உண்மை நிலையைத் தெரிவிக்காமல், பாதாளச்சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து விட்டதாக கூறுவதாக பி.கல்யாணம் குற்றச்சாட்டியுள்ளார்.
குத்தாலம் பி.கல்யாணம் செய்தியாளர் சந்திப்பு இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மயிலாடுதுறையில் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பாதாளச்சாக்கடை திட்டம் சரியாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் பழுது ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. அத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தேன்.
அதன் காரணமாக, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டு பாதாளச்சாக்கடை திட்டத்தின் நிலை குறித்த அறிக்கை கேட்கப்பட்டது. ஆனால், அலுவலர்கள் பாதாளச்சாக்கடை திட்டத்தின் அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்துவிட்டதாக கூறுகின்றனர்.ஆனால், இன்றுவரை குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை.ஆய்வுக்குழுவானர் உண்மை நிலையை மறைக்காமல் சரியான தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி