மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாததால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. பொதுத் தேர்வின் போது பள்ளிகளுக்கு சீரான மின்சார விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு மின்சார வாரியத்தை அறிவுறுத்திய போதிலும் ஒரு சில தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்பட்டு மாணவர்கள் இன்னல்களை சந்தித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் காருக்காக மின்விசிறி இயக்கமா ? அதிர்ச்சியில் மக்கள் - Car located at Mayiladuthurai District Collector's Office
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவையின்றி மின்விசிறி பயன்பாட்டில் இருந்தது,அங்கு மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கார் நிறுத்தத்தில் தேவையின்றி மின்விசிறி பயன்பாட்டில் இருந்ததுள்ளது. அங்கு மாவட்ட வருவாய் அலுவலரின் காரும் நிறுத்தப்பட்டு இருந்ததால் , காருக்காக மின்விசிறி பயன்படுத்தப்பட்டதா என மனு கொடுக்க வந்த மக்கள் கோபம் அடைந்தனர். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நன்று என விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு ஊழியர்கள் , இப்படி தேவையின்றி மின்சாரத்தை வீணடிப்பது சரியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டை உலுக்கும் மின்வெட்டு - காலம் திரும்புகிறதா?
TAGGED:
Fan running fan unmanned car