தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறுஆய்வு செய்ய உத்தரவு! - nagapattinam news

Mayiladuthurai Explosive Godown Accident: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி குடோனில் விபத்து ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்பு தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Mayiladuthurai Explosive Godown Accident
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 12:31 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்குச் சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி தயாரித்துக் கொண்டிருக்கும்போது, வெடி மருந்துகள் வெடித்ததில் ஏற்பட்ட கோர விபத்தில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் (32), மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் (22), கல்லூரி மாணவர் நிகேஸ் (21) மற்றும் ராகவன் (23) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த மணிவண்ணன் என்பவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும் பக்கிரிசாமி, மாசிலாமணி மற்றும் மாரியப்பன் ஆகிய மூன்று பேர் நாகை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பொறையார் காவல் நிலையத்தில் இந்திய வெடிபொருள் சட்டம் (Indian explosive act) 286, 337, 304, 9 (B) (1) (a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வெடி மருந்து கிடங்கின் உரிமையாளர் மோகனை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட வெடி மருந்து கிடங்கில் நேற்று (அக்.5) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் அசம்பாவிதம் நடைபெற்றதாக செவிவழி செய்தியாகக் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர்.

மேலும், எப்படி இந்த வெடி மருந்துகள் வெடித்தது என்பதைக் கண்டறிவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. உரிமையாளர் மோகனிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்புத் தன்மை குறித்து மறு ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 காவல் துறையினர் கைது!

ABOUT THE AUTHOR

...view details