மயிலாடுதுறை : கங்கணம்புத்தூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ரூ.96.88 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், மரம் நடுதல், கிராமப்புறங்களில் போடப்படும் தார் சாலைகள், அரசு நிதியில் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும் வீடுகள் போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் குழந்தைகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் உணவு, ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவையும் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் கணக்குகளையும் சரிபார்த்தார்.