தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியென்றால் என்ன..? தருமபுரம் ஆதீனத்தின் விளக்கம்..! - Diwali Celebration

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 23, 2022, 7:50 AM IST

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் நேற்று (அக்.22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தீபாவளி என்பது தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. இருள் நீக்கி ஒளி கொடுப்பது. அகந்தையை நீக்கி, ஆணவத்தை நீக்கி தன்னருள் புரிவது. இதுதான் 'தீபாவளி' தத்துவமாக விளங்குகிறது. ஏழைகளாக இருந்தால் கூட அன்றைய நாள் புத்தாடை அணிந்து இனிப்பு பண்டங்கள் உண்டு, அனைவருக்கும் ஈத்துவக்கும் இன்பம் என்பதற்கு இணங்க எல்லா சமயங்கள் மதங்கள் சாதிகளை கடந்து அனைவரும் சேர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழாவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இது தேவர்களை கொடுமை செய்த 'நரகாசுரன்' என்ற ஒரு அசுரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாளாகும். அப்போது 'நரகாசுரன் நான் இவ்வளவு நாட்களாக மக்களையும் தேவர்களையும் துன்புறுத்திவிட்டேன். ஆகையினால் நான் இறந்தநாளை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்' என்று சொல்ல, அதே போன்று இறைவன் அருளையும் அவனுக்குத் தந்து சம்காரம் செய்கிறார்.

அந்த நினைவு நாளாக எல்லோரும் புத்தாடை அணிந்து, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய நாளில் வெந்நீர் என்பது கங்கையாகி. எண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பின்னர் இனிப்புகள் உண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ வேண்டும். மழைக்காலம் என்பதால் சிறு சிறு பூச்சிகள் மக்களை சுற்றிக் கொண்டிருக்கும். பட்டாசு மூலம் சுவாசக் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு சாஸ்திரத்திற்காக மட்டும் ஓரிரு பட்டாசுகளை மட்டும் வெடித்து மகிழ வேண்டும். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் இருக்கின்ற காரணத்தினால், அதிக பட்டாசுகள் வெடித்து அவைகளை துன்புறுத்த வேண்டாம் என தெரிவித்திருக்கின்றோம்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற அசுர குணங்கள் அழிவதையே தீபாவளி நாளாக கொண்டாடுகிறோம். அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெற்றும் இருள் நீங்கி ஒளிபெற்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி - தீபாவளி வாழ்த்து

இதையும் படிங்க: கொஞ்சும் பறவையே! உன்னை கையிலேந்தவா? - பார்வையாளர்களை கவரும் பூங்கா

ABOUT THE AUTHOR

...view details