தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் திறப்பு! - ரோட்டரி சங்கம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழாவும், மூலிகைத் தோட்டம் திறப்பு விழாவும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடைப்பெற்றன.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் திறப்பு

By

Published : Mar 19, 2021, 4:55 PM IST

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், ரோட்டரி சங்கங்கள் சார்பில், மூலிகைத் தோட்டம் திறப்பு விழா மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம் திறப்பு

இதில், தருமபுரம் ஆதீனம், குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மூலிகைத் தோட்டத்தை திறந்து வைத்து, மூலிகைச் செடிகளை நட்டுவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அருளாசி கூறினார். இதில், தலைமை மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'நூறு ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது!'

ABOUT THE AUTHOR

...view details