மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாததால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின்தங்கியுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுகொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று (ஜன.7) காலை பெண்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் 480 மாணவிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை தூய தெரசா கல்லூரியின் செயலர் அருள்சகோதரி கருணா ஜோசப்பாத், முதல்வர் காமராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
கேசவன் பாளையத்தில் தொடங்கிய போட்டியானது எருக்கட்டாஞ்சேரி, ஒழுகைமங்கலம், ஒழுகைமேட்டுப்பாளையம், பொறையார் ,ராஜூவ்புரம், தரங்கம்பாடி வழியாக பத்து கிலோமீட்டர் தூரம் கடந்து மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.