திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான ராஜகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் ராஜகுமார் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார்.
ஆனால், வாகன பரப்புரையைத் தொடங்கவில்லை. இதனால், கூட்டணிக் கட்சிகள் புலம்பி வந்தன. இந்நிலையில், நேற்று (மார்ச் 24) மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட மணக்குடி, மன்னம்பந்தல், குளிச்சாறு, பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ராஜகுமார் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.