மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதலை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் போராட்டம் - manalmedu College students
நாகை: டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மணல்மேடு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
_student
மேலும் தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும் எனவும் வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: டெல்லி மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்!