தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி போட்டால் மட்டுமே சரக்கு: மதுப்பிரியர்களுக்கு வந்த சோதனை - கரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப்பிரியர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac
tasmac

By

Published : Oct 14, 2021, 3:46 PM IST

இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மதுபான பிரியர்களாகிய நுகர்வோர், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது, கோவிட் 19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை பெற முடியும்.

மாவட்ட ஆட்சியர் லலிதா

இந்த செயற்கரிய செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை அளித்து ஆரோக்கியமான கோவிட்-19 தொற்றில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு மதுபான பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள்

ABOUT THE AUTHOR

...view details