தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க அரசுப் பேருந்தில் பயணித்த ஆட்சியர் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வீட்டிலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்தும், நடைபயணம் செய்தும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரசு பேருந்தில் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர்
அரசு பேருந்தில் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர்

By

Published : Dec 20, 2021, 7:56 PM IST

நாகப்பட்டினம்:சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் அரசு அலுவலர்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணிக்கு வருகைபுரிந்தார்.

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா மூன்று கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார்.

அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். பேருந்தில் நின்றுகொண்டே பயணம்செய்த மாவட்ட ஆட்சியர் கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்துசேர்ந்தார்.

அரசுப் பேருந்தில் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரோடு ஆண் அலுவலர்களும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்துவந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அலுவலர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பணி நிரவலின்போது இதையெல்லாம் உறுதிசெய்யுங்க? - ஆசிரியர் கூட்டமைப்பு

ABOUT THE AUTHOR

...view details