தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: மயிலாடுதுறை ஆட்சியர் - தமிழ்நாடு

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ஐ பின்பற்றாமல் மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆணை பிறப்பித்து குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

By

Published : Jul 29, 2021, 2:34 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதியளிக்க வேண்டும். அனுமதியளிக்காதபட்சத்தில்,

  • தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும்,
  • தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், நாட்டுப்படகு மூலம் சிறுதொழில் செய்யும் மீனவர்களை பாதிக்காத அளவில் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இன்னொரு தரப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஆணை

இந்நிலையில், "தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983இன்படி மயிலாடுதுறை கடலோரப் பகுதியில் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு,

கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ஐ மீறி பிடிக்கப்படும் மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் மீது மீன்வளத்துறை, வருவாய் துறை, காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் லலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.

மறு உத்தரவு வரும்வரை அலுவலர்கள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ஐ பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி "மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ஐ மீறி பிடிக்கப்படும் மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து மீன்களை பொது ஏலம் விடப்படும் என்றும்,

  • தடையை மீறி பிடிக்கப்படும் மீன்களை வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆய்வுக்குச்சென்ற மீன்வளத்துறை அலுவலர்களை தடுத்து நிறுத்திய மீனவர்கள்'

ABOUT THE AUTHOR

...view details