நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் அகோரம். பாஜக பிரமுகரானஇவர், கடந்த மாதம் 31ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற்ற பேரணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டில் விடுத்தார். பின்னர், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி அகோராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே ரவுடிச வழக்கில் சிறையில்... தற்போது மீண்டும் கைது... பாஜக பிரமுகருக்கு தொடரும் சோதனைகள்! - mayiladuthurai bjp person agoram arrested
நாகை: உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் பாஜக பிரமுகர், தற்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற வழக்கில் கைதாகியுள்ளார்.
![ஏற்கனவே ரவுடிச வழக்கில் சிறையில்... தற்போது மீண்டும் கைது... பாஜக பிரமுகருக்கு தொடரும் சோதனைகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5076802-thumbnail-3x2-ja.jpg)
இந்நிலையில், கடந்த மாதம் 11ஆம் தேதி செம்பனார்கோவில் அருகே காரில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அகோரத்தின் ஆதரவாளர்கள் முத்துமுரளிதரன், சிற்றரசன், சபரிவேலன் ஆகியோர் மீது செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் அகோரத்தையும் கைது செய்த காவல் துறையினர், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 27ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த அகோரம், தன்மீது காவல் துறை பல்வேறு பொய் வழக்குகள் போட முயற்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டினார்.