தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரை தவறாக சித்தரித்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்! பாஜகவினர் புகார் - பிரதமரை தவறாக சித்தரித்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்

நாகை : பிரதமரை தவறாக சித்தரித்து, ஃபேஸ்புகில் பதிவிட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

degrading FB post on Modi
degrading FB post on Modi

By

Published : Aug 13, 2020, 2:48 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை தவறான முறையில் சித்தரித்து, கடந்த ஏழாம் தேதி கெல்வின் லூயிஸ் என்பவரது பெயரில் ஃபேஸ்புக்கில் கார்ட்டூன்கள் பதிவிடப்பட்டன. இந்நிலையில், பிரதமர் மோடியை ஆபாசமான முறையில் சித்தரிக்கும் இந்தக் கார்டூன்கள் குறித்து பாஜகவின் மயிலாடுதுறை நகரத் தலைவர் மோடி.கண்ணன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், பிரதமரை தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் பதிவிட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை!

ABOUT THE AUTHOR

...view details