தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தீர்மானம்... - new district

நாகை: தமிழ்நாட்டின் 36ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவிக்க வலியுறுத்தி  கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

வழக்கறிஞர்

By

Published : Aug 13, 2019, 11:32 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை தமிழ்நாட்டின் 36ஆவது மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் கடந்த ஒருமாதமாக நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு, மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலக முற்றுகை போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்கறிஞர் குழு என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தீர்மானம்...

இதையடுத்து, வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மயிலாடுதுறையை மாவட்டமாக்க தீர்மானம் நிறைவேற்ற மயிலாடுதுறை உள்கோட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி கிராம சபைகளை வேண்டுவது, தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என்றும், இதில் தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details