தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் பலத்த மழை! - Mayiladuthurai

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை... மக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை... மக்கள் அவதி

By

Published : Dec 3, 2022, 8:18 PM IST

மயிலாடுதுறை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது தொடர் பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை... மக்கள் அவதி

குத்தாலம், மங்கைநல்லூர், மன்னம்பந்தல், தருமபுரம், மணல்மேடு, உளுத்துக்குப்பை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியினர்.

இதையும் படிங்க:தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details