தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாதிரை விழா: மறையூர் நடராஜ பெருமானுக்கு பக்தர்கள் சீர்வரிசை - devotional news

திருவாதிரை விழாவை முன்னிட்டு மறையூர் வரதராஜ பெருமாள் கோயிலிலுள்ள நடராஜ பெருமானுக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழிபட்டனர்.

நடராஜ பெருமானுக்கு பக்தர்கள் சீர்வரிசை
நடராஜ பெருமானுக்கு பக்தர்கள் சீர்வரிசை

By

Published : Jan 6, 2023, 10:28 AM IST

நடராஜ பெருமானுக்கு பக்தர்கள் சீர்வரிசை

மயிலாடுதுறை:மறையூர் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. மாமுனிவர் அகதியர் வழிபட்ட இக்கோயில், சித்திரை மாதத்தில் சூரியனின் வெளிச்சம் நேராக கருவறைக்குள் செல்லும் சிறப்புடையதாகும்.

இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த காரணத்தால், கோயிலில் உள்ள நடராஜ பெருமான் உற்சவமூர்த்திகள் சிலை, அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் அகத்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவாதிரை விழாவுக்காக கிராம மக்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்வர்.

அந்த வகையில் இன்று (ஜனவரி 6) திருவாதிரை விழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நடராஜ பெருமானுக்கு மங்கல பொருள்கள் கொண்ட சீர்வரிசையை எடுத்துச் சென்று வழிபட்டனர். இதையடுத்து, அங்கிருந்து அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருவாதிரை விழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து செண்டை மேளங்கள் முழங்க பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதனிடையே அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டதால் நடராஜர் சிலையை மீண்டும் அகஸ்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருள செய்ய கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோனேரிராஜபுரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்..

ABOUT THE AUTHOR

...view details