மயிலாடுதுறை : தரங்கம்பாடி தாலுகா மேலையூரில் உள்ள தனியார் (அழகு ஜோதி அகாடமி) பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு கல்வி நிறுவனத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கலாமின் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நவீன தொழில்நுட்ப முறையிலான 15 அடி உயர அப்துல் கலாமின் உருவப்படம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அப்துல்கலாமின் திருவுருவ படத்தை பார்வையிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்துல் கலாம் உருவப்படத்துக்கு எஸ்.பி. மரியாதை - nagai latest news
தரங்கம்பாடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன தொழில்நுட்ப முறையிலான 15 அடி உயர அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
15 அடி உயர கலாமின் உருவப்படம்