மயிலாடுதுறை: மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவைச் சேர்ந்த விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் குழுவாக நேற்று (ஜுன் 25) கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் நாராயணமூர்த்தி(21) என்பவர் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் நாராயணமூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு இன்று மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.