தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை துலா உற்சவம்; காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல்லில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடல்! - thula utsavam in mayiladudurai

Thula Utsavam: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கிய நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

மயிலாடுதுறை துலா உற்சவம் : காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல்லில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை துலா உற்சவம் : காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல்லில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 11:01 AM IST

மயிலாடுதுறை துலா உற்சவம் : காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல்லில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதனால் ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு, காவிரிக் கரையில் எழுந்தருளி, ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (அக்.18) காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவ முதல் தீர்த்தவாரி துவங்குகிறது. இந்த உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரிக் கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். மாயூரநாதர், வதான்யேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

மேலும், மாயூரநாதர் வதான்யேஸ்வரர் கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மறுதினம் ஐப்பசி மாதம் பிறப்பதால் துலா கட்ட காவிரி ஆற்றங்கரை, பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் தூய்மை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்தி, காவிரியில் உள்ள புஷ்கரத் தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீரை நிரப்பி, பைப் மூலம் ஷவர் போன்று ஏற்பாடு செய்து பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“குடும்பத்தை பலப்படுத்துவதிலும் கட்சிக்காரர்களை வளப்படுத்துவதிலும் திமுக குறியாக உள்ளது”- கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ஆனாலும், காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் குறைந்த அளவே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மேலும், இன்று மதியம் 2 மணி அளவில் சிவன் கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு, காவிரிக் கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

துலா உற்சவம் வரலாறு:பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி தங்களது பாவங்களை போக்குவதாகவும் கூறப்படுகிறது.

நதிகளின் பாவங்களைப் போக்க சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை நதி, மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி, தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இதையும் படிங்க:“காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு ஒதுக்காதது ஏன்?” - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details