தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தில் தீ மிதித் திருவிழா - 128 years festival

நாகை: மயிலாடுதுறை ஸ்ரீ தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தில் 128ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தீப்பாய்ந்தாள் அம்மனின் தீமிதி திருவிழா
தீப்பாய்ந்தாள் அம்மனின் தீமிதி திருவிழா

By

Published : Mar 10, 2020, 12:08 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீ மிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 128ஆம் ஆண்டாக தீ மிதி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காவடி, சக்தி கரகம் ஏந்தி, ஊர்வலமாக காவிரி ஆற்றங்கரை நான்கு கால் மண்டபத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியே ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தீப்பாய்ந்தாள் அம்மனின் தீ மிதித் திருவிழா

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். கண் கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.

இதையும் படிங்க: அத்திக்கடை ஸ்ரீகுபேர சாய்பாபா ஆலயத்தின் குடமுழுக்கு - பக்தர்கள் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details