கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
கரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறவே தயங்குகின்றனர். இந்நிலையில், ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
நிவாரணம் வழங்கிய அதிமுக எம்எல்ஏ இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பல்லவராயன் பேட்டை கிராமத்தில் வசித்துவரும் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாய மக்களுக்கும், ஆற்றங்கரை தெருவில் வசித்துவரும் திருநங்கைகளுக்கும் மயிலாடுதுறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை அடங்கிய நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க:கரோனா நிவாரணத்திற்கு நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் :ஆட்சியர் அறிவிப்பு