தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளை திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு - அங்காள பரமேஸ்வரி ஆலயம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளை திருவிழாவில் ஏராளமான பங்கேற்று வழிப்பட்டனர்.

mayana
mayana

By

Published : Mar 14, 2021, 9:23 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலையத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றன. பின்னர் அங்காளம்மன் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவாக சென்ற போது பக்தர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.

அதன் பின்னர் சுவாமி மயானம் வந்தது. அப்போது சுவாமி முன்பு பக்கதர்கள் விரதம் இருந்து காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமிக்கு அங்கு தீபாரதனைகள் நடைப்பெற்றன. அதன்பின் கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளை

இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், நோய்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். இந்த விழாவில் ஏராளமான பக்கதர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திருமண தோஷம் நீக்கும் ஹைதராபாத் சித்ரகுப்தர் கோயில்

ABOUT THE AUTHOR

...view details