தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனு கொடுக்கப் போனாலே நாயைப் பார்ப்பது போலப் பார்க்கின்றனர் - பொதுச் சொத்தை மீட்டுத் தரக்கோரி கிராமவாசிகள் போராட்டம்..! - மாதிரிமங்கலம் கிராம நிலப் பிரச்னை

Madhirimangalam Villagers protest: மாதிரிமங்கலம் ஊர் பொதுச் சொத்தை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முற்படுவதாக, கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது சொத்தை மீட்டு தரக்கோரி மாதிரிமங்கலம் கிராமவாசிகள் போராட்டம்
பொது சொத்தை மீட்டு தரக்கோரி மாதிரிமங்கலம் கிராமவாசிகள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 8:01 PM IST

பொது சொத்தை மீட்டு தரக்கோரி மாதிரிமங்கலம் கிராமவாசிகள் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் சுமார், 1000க்கும் மேற்பட்ட தலையாரி மானியத்தில் வழங்கப்பட்ட 0.72.5 ஏர்ஸ் ( 2 ஏக்கர் ) நிலம், ஊர் பொதுச் சொத்தாக 70 நபர்களின் (தலையாரிகள்) பெயரில் பட்டாவாக உள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலத்தில் விளைந்து வரும் வருமானத்தையும் சிரசாயி மாரியம்மன் கோயிலுக்கு அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அக்கிராமத்தில் உள்ள பழமையான சிரசாயி மாரியம்மன் கோயிலைக் கடந்த 2017ஆம் ஆண்டு கிராம மக்கள் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தைப் பராமரித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரகாசு என்பவரின் மகன்களான மாணிக்கம், கருணாநிதி, ராஜேந்திரன் ஆகிய மூவரும், கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தும் செலவுக்காகச் சமுதாய பட்டா தாரர்களிடமிருந்து கிரயம் பெற்றதாக மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும், ஆடிட்டராக உள்ள ராஜேந்திரனுக்கு கிரயம் செய்து கும்பாபிஷேகத்திற்குச் செலவு செய்ததாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதால் ஊர் பொதுச் சொத்தை மீட்டுத் தரும்படி காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரிடம் புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தலையாரி மானிய சொத்தை ஆடிட்டர் ராஜேந்திரன் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்ய உள்ளதைத் தடுத்து நிறுத்தி, கிராம சொத்தை மீட்க ஊர் பொதுக்கூட்டம் சிரசாயி மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் ஊர் பொதுச் சொத்தை மீட்கத் தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்கள் 200க்குத் மேற்பட்டோர், மயிலாடுதுறை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிமங்கலம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கிராமவாசி சிந்தனைவேந்தன் கூறும் போது, “மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, திருச்சி மண்டல ஐஜி, தமிழக முதலமைச்சர்ஆகியோர் நேரடியாக, கிராம மக்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையேல் பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் நேரிடையாக வந்து விசாரணை செய்வதாகக் கூறிய பின், சாலை மறியலைக் கைவிட்டு கோயிலில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:நாகூர் கந்தூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது!

ABOUT THE AUTHOR

...view details