நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் மெயின் ரோட்டில் ராஜாகண்ணு என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆக. 22) நள்ளிரவில் இவரது கடை திடீரென்று தீப்பற்றி எரிந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தொடர்ந்து, தீ விபத்து பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.