தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

By

Published : Nov 30, 2020, 7:40 PM IST

விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, வேளாண்மை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து சென்ற காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதையும் படிங்க:கடல் சீற்றத்தால் ரூ.20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கி சேதம்

ABOUT THE AUTHOR

...view details