தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைப் பணியை தொடங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்! - மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கி விரைவில் சாலை அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக் குவிந்தனர்.

Marxist party protest to start road work In mayiladurai  Marxist party protest In mayiladurai  Marxist party protest to start road work  சாலைப் பணியை தொடங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்  மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்  மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்
Marxist party protest to start road work In mayiladurai

By

Published : Mar 5, 2021, 11:05 AM IST

மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை ஊராட்சி அவையாம்பாள்புரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்புறச் சாலை அமைப்பதற்க்காக பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஒப்பந்த பணியை கார்த்திகேயன் என்பவர் மேற்கொண்டார்.

ஏற்கெனவே இருந்த தார்ச்சாலையை முழுவதுமாக கொத்தியுள்ளனர். ஆனால், ஒரு மாதத்தைக் கடந்தும் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கவில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், பணியை பாதியிலேயே நிறுத்திச்சென்ற ஒப்பந்தக்காரரை கறுப்புப் பட்டியலில் இணைத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிறுத்தப்பட்ட சாலைப் பணியை உடனே தொடக்க உத்தரவிடக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சியினரும், அப்பகுதி மக்களும் திரண்டனர்.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் ரெஜினாமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிறுத்தப்பட்டுள்ள சாலைப் பணிகள்

அப்போது, வரும் புதன்கிழமைக்குள் பணிகளை தொடக்கி விரைந்து முடித்துத் தருவதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூர் தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

ABOUT THE AUTHOR

...view details