மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். கூலி தொழிலாளியானஇவரை ஜூலை மாதம் 2ஆம் தேதி ஒன்பது பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் இரும்பு பைப், உருட்டுக்கட்டையால் மண்டை, வயிற்றுப் பகுதியில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கலியபெருமாள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மறுநாளே மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
கூலி தொழிலாளி தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் - அரசு மருத்துவமனை, காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே ஒன்பது பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு அரசு மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அவர் கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ததில், வயிற்றில் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் கலியபெருமாள் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், கலியபெருமாளை தாக்கிய குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யாத பெரம்பூர் காவல் துறையினரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசு மருத்துவமனை நிர்வாகம், பெரம்பூர் காவல் துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.