மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர் பல்வேறு வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்று வருவதாக குற்றஞ்சாட்டினர்.