தமிழ்நாடு

tamil nadu

மொழிப்போர் தியாகிகள் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்- அர்ஜுன் சம்பத்

By

Published : Jan 17, 2021, 5:26 PM IST

மயிலாடுதுறை: மொழிப்போர் தியாகிகள் பெயரில் திமுகவிற்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை வைத்துள்ளார்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன மடத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், "தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் கொள்கைக்கு ஆதரவு கேட்டு அனைத்து ஆதீனகர்த்தர்கள், இந்து சமய தலைவர்களை இந்து மக்கள் கட்சி சார்பில் சந்தித்து வருகிறோம். இன்று(ஜன.17) தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தை சந்தித்து தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் வெல்வதற்கு ஆதரவு கேட்டோம் அவர் எங்களை ஆசீர்வதித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதியதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டம் ஆன்மிக தலங்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் ஆன்மிக மாவட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு

ஜனவரி 24ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் என்ற பெயரில் திமுகவிற்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டத்தை அக்கட்சியினர் செய்துள்ளனர். உடனடியாக அத்தகைய உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த உதவித் தொகையை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்.

ஜனவரி 26 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் நிர்வாகம் அல்லது கடலோர காவல் படையினர் கச்சத்தீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றி தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். இதற்கு வலுசேர்க்கும் விதமாக கச்சத்தீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை அங்கு கொண்டாட வேண்டும்.

நடிகர் விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி, அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் அரசு இதுபோன்ற சம்பவங்களை வேடிக்கை பார்க்கக் கூடாது" என்றார்.

இதையும் படிங்க: துக்ளக் குருமூர்த்தியை சிறையில் அடைக்க வேண்டும் - இந்திய தேசிய லீக்

ABOUT THE AUTHOR

...view details