தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செண்டு மல்லிக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி - marigold Flower yield Farmers are happy with good prices

நாகப்பட்டிணம்: ஒரு கிலோ செண்டு மல்லி பூவுக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

marigold Flower
marigold Flower

By

Published : Jan 6, 2020, 10:13 PM IST

நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கன்னி, வீரன்குடிகாடு, வேட்டைகாரன், பால்பண்னைச்சேரி, பூவைத்தேடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்யப்படுகிறது.

பல்வேறு விழாக்களுக்கு செண்டு மல்லி பூ எல்லா காலத்திலும் மக்களால் விரும்பி வாங்கக் கூடியது என்பதால், சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட 90 நாள்கள் பயிரான செண்டு மல்லி பூ நன்கு விளைச்சலாகி தற்போது அறுவடை செய்யப்பட்டுவருகிறது.

செண்டு மல்லி பூ நன்கு விளைச்சலாகி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறுவடை செய்த செண்டு பூக்களை மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்கின்றனர். தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை விவசாயிகளுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சேர்மன் பதவி யாருக்கு?‘ - மோதிக்கொண்ட திமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details