தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 8, 2022, 11:54 AM IST

ETV Bharat / state

மாண்டஸ் புயல்: மயிலாடுதுறையில் கடல் சீற்றம்

மாண்டஸ் புயலால் மயிலாடுதுறையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

கடல் சீற்றம்
கடல் சீற்றம்

மயிலாடுதுறை: வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.

மண்ணரிப்பின் காரணமாக தரங்கம்பாடி வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையின் பழங்கால சுற்றுச்சுவர் மண்ணுக்குள் புதைந்து கிடந்த நிலையில், தற்போது வெளியில் தெரிகிறது. மேலும், கடல் சீற்றம் மற்றும் மண்ணரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கடல் சீற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள "மாண்டஸ் புயல்" காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரங்கம்பாடி, சந்திரபாடி, பூம்புகார், வானகிரி, சின்னங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 26 மீனவ கிராமங்களை சார்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால் மாண்டஸ்புயலின் காரணமாக பொதுமக்கள் வருவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்

ABOUT THE AUTHOR

...view details