மயிலாடுதுறை :மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே வானதி ராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இன்று (டிசம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜமாத் நிர்வாகி நூர்முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.