மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமாருக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணியின் வெற்றி உறுதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம் எத்தனை தொகுதியில் வெல்வோம் என்பதுதான் உறுதியாகவில்லை.