தமிழ்நாடு

tamil nadu

குத்தாலம் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் தயாரித்த நபர் கைது

By

Published : Jun 2, 2021, 2:13 PM IST

நாகப்பட்டினம்: குத்தாலம் அருகே வீட்டிலேயே 200 லிட்டர் சாராய ஊறல் தயாரித்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நபர் கைது
நபர் கைது

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக ’குடி’மகன்கள் சொந்தமாகவும் மது காய்ச்சி குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் பலர் உயிரிழப்பையும், கண் பார்வை இழப்பையும் சந்தித்துவருகின்றனர். இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பல்வேறு இடங்களில் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூரைச் சேர்ந்த பாபுவின் வீட்டிலிருந்து சாராய வாடை அடிப்பதாகப் பொதுமக்கள் காவல் துறையினருக்குப் புகாரளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட மதுவிலக்கு தனிப்படையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் இரண்டு குக்கர்களில் வெல்லப்பாகு பயன்படுத்தி சாராய ஊறல் தயாரித்தது தெரியவந்தது.

உடனடியாகச் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த காவல் துறையினர், பாபுவை கைதுசெய்து குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து குத்தாலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details