நாகப்பட்டினம்: தமிழர்களின் தொன்மையான விளையாட்டு மல்லர் கம்பம். சிலம்பம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளை போன்று பிரசித்தி பெற்ற விளையாட்டு இது.
மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உலகதுரை என்னும் உடற்பயிற்சி ஆசிரியர் பலருக்கும் இவ்விளையாட்டை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.