மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
பாலியல் வன்கொடுமை கொலைகள் தொடர்பாக மநீம தீர்மானம்! - மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம்
மயிலாடுதுறை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலைசெய்யப்பட்ட பெண்களின் உடல் தேசிய மகளிர் ஆணையம் அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுமதி இன்றி அடக்கமோ, எரியூட்டுதலோ செய்யப்படக் கூடாது என மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
mnm
மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலாளர் அருண் சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது:
- பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலைசெய்யப்பட்ட பெண்களின் உடல் தேசிய மகளிர் ஆணையம் அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுமதி இன்றி அடக்கமோ, எரியூட்டுதலோ செய்யப்படக் கூடாது.
- நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும்,
- மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற தடைச்சட்டம் இருந்தும் அப்பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் மயிலாடுதுறை நகராட்சிக்கு கண்டனம்.