மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியில் பிரசித்தி பெற்ற நர்த்தன விநாயகர் கோயில் உள்ளது.
நர்த்தன விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் - மயிலாடுதுறை
நாகை: மயிலாடுதுறை நர்த்தன விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
நர்த்தன விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
இங்கு முதல் காலயாகசாலை பூஜை நேற்றுமுன்தினம் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளம் ஒலிக்க கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.