நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரை அடுத்த ஆதனூரில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
புற்றடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் - Temple
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த ஆதனூரில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ புற்றடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 27ஆம் தேதி விக்னேஸ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மூலவர் ஸ்ரீ புற்றடி மாரியம்மனுக்கு புனித கலச நீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.