வன்னியர் சங்க இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இறந்த 21 தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் வீடுகள் கட்டிகொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த தியாகி ராஜேந்திரன் குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு கட்டிகொடுப்பதற்காக தளவாடப் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு மாவீரன் வன்னியர் சங்க தலைவர் விஜிகே.மணிகண்டன், வன்னியர் சத்திரியர் சங்க தலைவர் ராஜன் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு இன்று(அக்.18) ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்காக மயிலாடுதுறை வழுவூரில் இருந்து மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் விஜிகே மணிகண்டன் தலைமையில் வன்னியர் சத்திரியர் சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் வில்லியநல்லூருக்கு இன்று(அக்.18) மதியம் புறப்பட்டனர்.
அவர்களை மயிலாடுதுறை காவல் துறையினர் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் தடுத்து நிறுத்தி விஜிகே மணிகண்டன் உள்பட 100 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.