மயிலாடுதுறை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கொங்குநாடு விவகாரம் என்பது ட்ரையல் பலூன்
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொங்குநாடு என்று பிரிப்பதற்கு இப்பொழுது யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதனை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இதனை டிரையல் பலூனாக வேறு ஏதோ காரணத்துக்காக விடுகிறார்கள்.
தேவையற்றது நீட்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் என்பது தேவையற்ற ஒன்று, ஆனால் சட்டரீதியாக அதனைச் சந்திக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது. இந்த ஆண்டில் முடியாவிட்டாலும், அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசின் முயற்சி வெற்றிபெறும்.
யூனியன் என்பதன் அர்த்தம் என்ன?
ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கூறுபவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக உள்ளனர். யூனியன் பட்ஜெட் அதாவது ஒன்றிய பட்ஜெட் என்ற பெயரிலேயே பட்ஜெட் போடப்படுகிறது. யூனியன் மினிஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை.