தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு வேண்டும்- காதல் ஜோடிகள் காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு - parents

நாமக்கல்: காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கோரி காதல் ஜோடிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

ஸ்ரீனிவாசன்-கவுரி

By

Published : May 18, 2019, 4:26 PM IST

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டனர். மேலும் பெற்றோர்கள் மூலம் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆண்டலூர் கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரும் அதேபகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்ததால், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த பெற்றோர்கள் இருவரையும் மிரட்டியதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இரண்டு ஜோடிகளின் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி-பிரியதர்ஷினி

ஒரே நாளில் இரண்டு காதல்ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமைடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இருதினங்களுக்கு முன்பு பாதுகாப்பு கேட்டு நான்கு காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details